/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி காங்., கோஷ்டி பூசல் வயநாட்டில் அம்பலமானது
/
புதுச்சேரி காங்., கோஷ்டி பூசல் வயநாட்டில் அம்பலமானது
புதுச்சேரி காங்., கோஷ்டி பூசல் வயநாட்டில் அம்பலமானது
புதுச்சேரி காங்., கோஷ்டி பூசல் வயநாட்டில் அம்பலமானது
ADDED : நவ 10, 2024 05:03 AM
புதுச்சேரி காங்., கட்சிக்குள் யார் அடுத்த முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது என்ற போட்டி தற்போதே துவங்கி விட்டது. ஏற்கனவே கோஷ்டி பூசல்களால் சிதறி கிடக்கும் காங்., கட்சிக்குள், சீனியர் தலைவர்கள் மூவர் வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் கனவில் களம் இறங்க காய் நகர்த்தி வருகின்றனர்.
கட்சி கூட்டங்களில் ஒற்றுமையாக இருப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சீனியர் தலைவர்கள் நவக்கிரகங்கள் போல் ஆளுக்கு ஒரு திசையாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரி காங்., நிர்வாகிகள் வயநாட்டில் போட்டியிடும் பிரியங்காவுக்கு ஆதரவு திரட்ட கேரளா சென்றனர். இவர்கள் செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக புதுச்சேரியின் மாஜி அமைச்சர் கேரளா சென்று, பிரியங்காவை தனியாக சந்தித்து புதுச்சேரியின் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசினார்.
அடுத்த நாள் கேரளா சென்ற புதுச்சேரியின் மற்ற நிர்வாகிகள் பிரியங்காவை சந்திக்க முடியாமல் நின்றனர். கடைசியாக மாஜி அமைச்சரின் ஏற்பாட்டு மூலம் மற்ற நிர்வாகிகளும் பிரியங்காவை சந்தித்து பேசினர். பின்பு, ஒரு சில நாட்கள் தங்கி வயநாட்டில் பிரசாரம் மேற்கொண்டு புதுச்சேரி திரும்பினர்.
அப்போது கட்சியின் தலைமையில் மாஜி அமைச்சருக்கு, அதிக செல்வாக்கு உள்ளது வெட்ட வெளிச்சமானது. இதனால், கடுப்பான சீனியர் தலைவர்கள் மாஜி அமைச்சருக்கு எதிராக அவரது உறவினரை அதே தொகுதியில் களம் இறக்க தயார் செய்து வருவதாக காங்., வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.