/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
/
வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : ஜன 06, 2024 06:35 AM

புதுச்சேரி : திருமண பத்திரிக்கையில் பெயர் போடாததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த இருவருக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி புதுநகர் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராயன், 35; கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து தனியாக வசித்து வந்தார். சுப்ராயன் தாய் மாமனான அதே பகுதி 3வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன் (எ) கோவிந்தசாமி, 36; இவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவரது திருமண பத்திரிக்கையில், சுப்ராயன் பெயர் மட்டும் அச்சிடப்பட்டது. பிரிந்து சென்ற அவரது மனைவி பெயர் இடம் பெறவில்லை.
இது குறித்து சுப்ராயன் கோவிந்தனிடம் கேட்டு தகராறு செய்தார். கடந்த 28.06.2012 அன்றும், சுப்ராயனுக்கும், கோவிந்தனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கோவிந்தன் மற்றும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், 37; சேர்ந்து சுப்ராயனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். எஸ்.பி., மாறன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
கோவிந்தன் மற்றும் கண்ணன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.