/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜய் ஹசாரே கோப்பை போட்டி புதுச்சேரி கிரிக்கெட் அணி வெற்றி
/
விஜய் ஹசாரே கோப்பை போட்டி புதுச்சேரி கிரிக்கெட் அணி வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை போட்டி புதுச்சேரி கிரிக்கெட் அணி வெற்றி
விஜய் ஹசாரே கோப்பை போட்டி புதுச்சேரி கிரிக்கெட் அணி வெற்றி
ADDED : டிச 27, 2024 06:10 AM

புதுச்சேரி: விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் புதுச்சேரி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில்நாகலாந்து அணியை விழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
அதன்படி, அகமதாபாத் நகரில் நேற்று (26ம் தேதி) நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும்,நாகலாந்து அணியும் மோதியது. இதில், முதலில் ஆடிய நாகலாந்து அணி 50 ஓவர்களில்6 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்தது.
புதுச்சேரி அணியின் சித்தாக் சிங் 4 விக்கெட் எடுத்தார்.
பின், ஆடிய புதுச்சேரி அணி 43 ஓவர்களில்7 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புதுச்சேரி அணியின் அமன் கான் 70 ரன், அன்கிட் ஷர்மா 50 ரன் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது அமன் கானிற்கு வழங்கப்பட்டது.விஜய் ஹசாரே கோப்பையில் புதுச்சேரி அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும்.