/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்வாங்கிய பாலம் சீரமைப்பு பணி தீவிரம் 4வது நாளாக புதுச்சேரி- கடலுார் போக்குவரத்து துண்டிப்பு
/
உள்வாங்கிய பாலம் சீரமைப்பு பணி தீவிரம் 4வது நாளாக புதுச்சேரி- கடலுார் போக்குவரத்து துண்டிப்பு
உள்வாங்கிய பாலம் சீரமைப்பு பணி தீவிரம் 4வது நாளாக புதுச்சேரி- கடலுார் போக்குவரத்து துண்டிப்பு
உள்வாங்கிய பாலம் சீரமைப்பு பணி தீவிரம் 4வது நாளாக புதுச்சேரி- கடலுார் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 06, 2024 06:28 AM

அரியாங்குப்பம் : கடலுார் சாலையில் உள்வாங்கிய ஆற்றுப் பாலம், சீரமைப்பு பணிதீவிரமாக நடந்து வருகிறது.சாலை துண்டிப்பால், 4வது நாளாகபுதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுமக்கள்பாதிக்கப்பட்டனர்.
பெஞ்சல் புயல் காரணமாக கனமழை கொட்டி தீத்ததால், கடந்த1ம் தேதி வீடூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால்,நோணாங்குப்பம் ஆற்றில் கடந்த 2ம் தேதி, சென்ற வெள்ளத்தால் கரை உடைந்து, என்.ஆர்.,நகரில் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து, கடலுார் சாலையில்நோணாங்குப்பத்தில் உள்ள இரு பாலங்கள்வழியாகதண்ணீர் பெருக்கெடுத்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், கடலுார் சாலை, இடையார்பாளையம், ஆற்றுசிறியபாலத்தின் சாலை இணைப்பு பகுதி திடீரென உள் வாங்கியது.
அதையடுத்து,பாதுகாப்பு கருதி, போக்குவரத்தை மாற்றுப்பாதை வழியாக திருப்பி விட்டனர்.உடனடியாக, பொதுப்பணித்துறையினர், பாலம் பகுதியில் ஜே.சி.பி.,இயந்திரம் மூலம்தோண்டி சீரமைப்பு பணியை துவக்கினர்.
பாலம் உள்வாங்கிய இடத்தில், 8.5 மீட்டர் அகலம்,4 மீட்டர்நீளம், 3.5மீட்டர்ஆழம் தோண்டி, கான்கிரீட் கலவை கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியை கவர்னர் கலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமிபார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே அருகில் உள்ள பழைய பாலத்தின் வழியே இரு சக்கர வானங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். பள்ளி, கல்லுாரி வேலைக்கு செல்பவர்கள் ஒரு நேரத்தில்சென்றதால், பழைய பலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புயல், கன மழை, வெள்ளம் மற்றும் பாலம் உள் வாங்கியது எனபல காரணங்களால், கடலுார் சாலையில்,4வது நாளாகபோக்குவரத்து தடைபட்டது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் வழியாக 10 கி.மீ., சுற்றி கடலுார் சென்றன. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர்.
பாதிப்புக்கு காரணம்
நோணாங்குப்பம் சிறிய பாலம் அருகேதனியார் படகு குழாம்அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பாலத்தின் வழியாக தண்ணீர்தடையின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,அதன் அருகே உள்ள மற்றொரு சிறிய பாலத்தின் தண்ணீர் செல்லும் வழியில், தனியார் நிறுவனம்சுற்றுசுவர் அமைத்துள்ளது.
இதனால், பாலம் வழியாக வௌ்ளநீர் வடியாமல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால்,ஊருக்குள் தண்ணீர் புகுவதால் பாதிப்பு ஏற்படுவதாக இடையார்பாளையம் மக்கள்ஏற்கனவே, போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும்,பிரெஞ்சு ஆட்சி காலத்தில், 1889ம் கட்டடப்பட்ட நோணாங்குப்பம் பழைய சுண்ணாம்பாறு பாலம் உறுதியாக உள்ளது. ஆனால், இடையார்பாளையம் ஆற்று பாலம் 1992ம் கட்டி, 32 ஆண்டுகள் ஆகிறது. பாலம் தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் உள்வாங்கியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.