தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி - டில்லி அதி விரைவு ரயில் இன்று, பிப்., 7ம் தேதி ரத்து

புதுச்சேரி - டில்லி அதி விரைவு ரயில் இன்று, பிப்., 7ம் தேதி ரத்து

புதுச்சேரி - டில்லி அதி விரைவு ரயில் இன்று, பிப்., 7ம் தேதி ரத்து


ADDED : ஜன 31, 2024 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு செல்லும் அதிவிரைவு ரயில் இன்றும் வரும், 7 ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமையன்று காலை 9:55 மணிக்கு, டில்லிக்கு அதி விரைவு ரயில் (எண்: 22403) செல்கிறது.

ரயில் பாதையில் மதுரா அருகே, பராமரிப்பு பணிகள் நடப்பதால், இந்த அதிவிரைவு ரயில் இன்று, 31ம் தேதி மற்றும் வரும் பிப்., 7ம் தேதி, ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, வரும் பிப்.4ம் தேதி டில்லியில் இருந்து புதுச்சேரிக்கு, காலை 11:15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில்(எண்: 22404) ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 2:15 மணிக்கு ஹவுரா புறப்படும், புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு ரயில் (எண்: 12868) , 2 மணி 45 நிமிடங்கள் தாமதமாக, மாலை 5:00 மணிக்கு புறப்பட உள்ளது.

இந்த தகவலை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us