sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு கல்லூரி பட்டப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சேர்க்கைகள் துவக்கம்

/

அரசு கல்லூரி பட்டப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சேர்க்கைகள் துவக்கம்

அரசு கல்லூரி பட்டப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சேர்க்கைகள் துவக்கம்

அரசு கல்லூரி பட்டப் படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சேர்க்கைகள் துவக்கம்


ADDED : ஜூலை 26, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த சேர்க்கை நேற்று துவங்கியது.புதுச்சேரியில் உள்ள 6 கலை, அறிவியல் கல்லூரிகளில் 30 பாட பிரிவுகளில் முதலாமாண்டில் 2018 காலியிடங்கள் உள்ளன.

இதில் பி.காம் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கவுன்சிலிங் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நேற்று துவங்கியது.கலை, அறிவியல் படிப்புகளுக்கான கன்வீனர் சவுந்தரவள்ளி வரவேற்றார். சேர்மன் சுந்தரம் தலைமை தாங்கினார். பி.காம் தரவரிசை பட்டியலில் 94.96 கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்ற காயத்ரி, 94.34 கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடம் பிடித்த நான்சி சுவேதா, 91.58 கட் ஆப் மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடம் பிடித்த கங்கா ஆகியோர் பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.காம்., பொது பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தனர்.



அமைச்சர் கல்யாணசுந்தரம், சேர்க்கை அனுமதி கடித்ததை வழங்கினார். அரசு கல்லூரிகளின் முதல்வர்கள் ராமசாமி, சீத்தாராமன், ஷெரில், முதல்வர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரும்பாலான மாணவிகள் பாரதிதாசன் கல்லூரியில் பி.காம்., சேர ஆர்வம் காட்டியதால் அந்தக் கல்லூரி இடங்கள் வேகமாக நிரம்பியது. தொடர்ந்து கார்பரேட் செக்ரட்ரிஷிப், ஆபிஸ் மேனேஜ்மென்ட், பாரின் ட்ரேட் உள்ளிட்ட பி.காம்., பாடப்பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடந்தது. நேற்றைய முதல் நாள் கவுன்சிலிங்கில் 208 பேர் கலந்து கொண்டனர். மீதமுள்ள காலியிடங்களுக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது.



கவுன்சிலிங் பட்டியல் பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்தில் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சிலிங் அழைப்பு கடிதம் இதுவரை கிடைக்காதவர்கள் விண்ணப்பித்ததிற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் கல்யாணசுந்தரம் பேசும்போது, 'சென்டாக் மாணவர்களுக்கு, காமராஜர் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, அடுத்தாண்டு முதல் முன்கூட்டியே வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இரு அரசு கல்லூரிகளில் பி.காம் படிப்பிற்கு சேர்க்கை நடத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கவில்லை என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி பல்கலைக்கழக சேர்க்கை அனுமதி பெற்று பி.காம்., இடங்கள் நிரப்பபடும்' என்றார்.








      Dinamalar
      Follow us