/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரோட்டரி புதுச்சேரி கிராண்ட் சார்பில் ஹாக்கி உபகரணங்கள் வழங்கல்
/
ரோட்டரி புதுச்சேரி கிராண்ட் சார்பில் ஹாக்கி உபகரணங்கள் வழங்கல்
ரோட்டரி புதுச்சேரி கிராண்ட் சார்பில் ஹாக்கி உபகரணங்கள் வழங்கல்
ரோட்டரி புதுச்சேரி கிராண்ட் சார்பில் ஹாக்கி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 26, 2011 12:08 AM
புதுச்சேரி : ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி கிராண்ட் சார்பில் ஹாக்கி விளையாட்டை ஊக்கப்படுத்த 32 மாணவர்களுக்கு ஹாக்கி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி கிராண்ட் தலைவர் இளவழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி தற்போது நலிவடைந்து வருகிறது. இவ்விளையாட்டை மேம்படுத்த டில்லியில் உள்ள அரசு சாரா நிறுவனமான ஹாக்கி சிட்டிசன் குரூப் 'ஓராயிரம் ஹாக்கி கால்கள்' எனும் திட்டத்தைத் துவக்கி உள்ளது. ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி கிராண்ட் எனும் அமைப்பு புதுச்சேரியில் இத்திட்டத்தை இணைந்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 13ம் தேதி புதுச்சேரி தவளக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 மாணவர்களுக்கு ஹாக்கி மட்டைகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 மாணவியருக்கு ஹாக்கி மட்டைகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் இளவழகன் தலைமை தாங்கினார். ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுனர் ஜோசப் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் நடராஜன் வாழ்த்தி பேசினார். ரோட்டரி சங்க செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் மாணிக்கம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார், பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.