/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கி வைப்பு
/
கழிவுநீர் வாய்க்கால் பணி துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 26, 2011 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தட்டாஞ்சாவடி தொகுதி மகாத்மா நகரில் 7 லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் வாய்க்கால், சாலை அமைக்கும் பணியினைத் தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் தாமரை, இளநிலை பொறியாளர் பெரியதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.