/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிக்க 28ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
/
பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிக்க 28ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிக்க 28ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிக்க 28ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
ADDED : ஜூலை 26, 2011 12:16 AM
புதுச்சேரி : பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரும் 28ம் தேதி முதல் வழங்கப்படுகின்றது.
கலெக்டர் ராகேஷ் சந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசு கடை உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரும் 28 ம்தேதி முதல் சாரம் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.
அடுத்தமாதம் 26ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 2008ம் ஆண்டின் சட்ட விதிகளுக்கு உட்படும் கடைகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும்.பட்டாசு சில்லரை விற்பனை கடை தரை தளத்தில் குறைந்த பட்சம் 9 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும். பட்டாசு, வெடி மருத்து வைத்திருக்கும் இடம், கல்வி நிலையங்கள், மருத்துவமனை, வழிபாட்டுத் ஸ்தலங்கள், திரையரங்கம், சந்தை போன்ற பாதுகாக்கப்பட்ட இடங்களிலிருந்து குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், கடையின் வரைபடம், இடத்தின் உரிமை தொடர்பான பத்திர நகல் முதலியன இணைக்க வேண்டும்.குறிப்பிட்டுள்ள கடைசி தேதிக்குப் பின் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படவோ அல்லது பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிப்பதால் மட்டும் பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என்ற உத்திரவாதம் இல்லை.