sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அட்டவணை இன விதவை பெண்களுக்கு சிறு பால்பண்ணை அமைக்க முழு மான்யம்

/

அட்டவணை இன விதவை பெண்களுக்கு சிறு பால்பண்ணை அமைக்க முழு மான்யம்

அட்டவணை இன விதவை பெண்களுக்கு சிறு பால்பண்ணை அமைக்க முழு மான்யம்

அட்டவணை இன விதவை பெண்களுக்கு சிறு பால்பண்ணை அமைக்க முழு மான்யம்


ADDED : ஆக 25, 2011 01:54 AM

Google News

ADDED : ஆக 25, 2011 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : அட்டவணை இன விதவைகள், சிறு பால் பண்ணை அமைக்க, நூறு சதவீத மான்யம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பாக பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள்: படித்து வேலையில்லா, அரசு வேலைவாய்ப்பு வரம்பைக் கடந்து 36 வயதுக்கு மேற்பட்ட, 50 வயதுக்குட்பட்ட 105 அட்டவணை இன பயனாளிகள் பால் பண்ணை அமைக்க 75 சதவீதம் மான்யம் அளிக்கப்படும்.

மேலும், பால் உற்பத்தி செய்து வருமானம் பெறும் வகையில், சிறு பால் பண்ணை அமைக்க அட்டவணை இன விதவைப் பெண்கள் 90 பேருக்கு நூறு சதவீத மான்யம் வழங்கப்படும்.

பால் கொள்முதலை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தியாளர்களுக்கு 75 சதவீத தீவன மான்யம் கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். தேசிய வேளாண் திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள ரூ.3 கோடி நிதியில், அரசு வேலைவாய்ப்பு, வயது வரம்பைக் கடந்த 50 வயதுக்குட்பட்ட படித்து வேலை வாய்ப்பற்ற 400 பேருக்கு சுய வேலைவாய்ப்பு பெறும் வகையில்,சிறு பால் பண்ணை அமைக்க 75 சதவீத மான்ய உதவி அளிக்கப்படும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 3000 பயனாளிகளுக்கு, முட்டை இன கோழிகள் 5 இலவசமாக வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு 6 வார வயதுள்ள 5000 வான்கோழி குஞ்சுகள் 50 சதவீத மான்யத்தில் வழங்கப்படும்.வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள அட்டவணை இன பயனாளிகள் 408 பேருக்கு 5 பெட்டைஆடுகள், ஒரு கிடா ஆடு வாங்குவதற்கு 75 சதவீத மான்யம் வழங்கப்படும். 30 ஆயிரம் கிரிராஜா கோழி குஞ்சுகள் 50 சதவீத மான்யத்தில் அளிக்கப்படும்.








      Dinamalar
      Follow us