/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கட்டா நகர் மின்நிலையம் நந்தா சரவணன் வேண்டுகோள்
/
வெங்கட்டா நகர் மின்நிலையம் நந்தா சரவணன் வேண்டுகோள்
வெங்கட்டா நகர் மின்நிலையம் நந்தா சரவணன் வேண்டுகோள்
வெங்கட்டா நகர் மின்நிலையம் நந்தா சரவணன் வேண்டுகோள்
ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : 'முத்தியால்பேட்டையில் மின் தடை பிரச்னைக்குத் தீர்வு காண, வெங்கட்டா நகர் துணை மின்நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்' என, நந்தா சரவணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: நந்தா சரவணன்: முத்தியால்பேட்டை தொகுதிக்கு மரப்பாலம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வருகிறது. வழியில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் முத்தியால்பேட்டை முழுவதும் மின் தடங்கல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, வெங்கட்டா நகரில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த அரசு அறிவிப்பு வெளியிட் டது. தற்போது அந்தத் துணை மின்நிலையத்தின் நிலை என்ன... முதல்வர் ரங்கசாமி: துணை மின் நிலையம் அமைப் பதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் நடந்து வருகிறது. நந்தா சரவணன்: இந்தப் பணிக்கு, நடப்பு நிதியாண்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது... முதல்வர் ரங்கசாமி: இத்துணை மின்நிலையம் அமைக்கத் தேவையான நிதியை ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்பரேஷன் மூலம் கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நந்தா சரவணன்: துணை மின்நிலையம், மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்... முதல்வர் ரங்கசாமி: வெங்கட்டா நகர் துணை மின்நிலையம் வரும் 2013ம் ஆண்டு மார்ச்சில் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நந்தா சரவணன்: மின்சார கம்பி மீது சிறு கிளைகள் விழுந்தால்கூட முத்தியால்பேட்டை இருளில் மூழ்கி விடுகிறது. அதேசமயம்,'ஓயிட் டவுன்' முழுவதும் மின்சாரம் இருக்கும். ஆனால், முத்தியால்பேட்டைக்கு மின்சாரம் வராது.
முதல்வர் ரங்கசாமி: வெங்கட்டா நகர் துணை மின்நிலையம் நிரந்தர தீர்வாக அமையும். லட்சுமிநாராயணன்: காற்றடித்தால்கூட மின்சாரம் நின்று விடுகிறது. தலைக்கு மேல் செல்வதை பூமிக்கடியில் செல்லும் கேபிளாக கொண்டு வரலாம். வெங்கட்டா நகரில் துணை மின்நிலைய வேலைகள் துவக்கப்படவில்லை. அந்த இடம் வேலிகாத்தான் புதராக காட்சியளிக்கிறது. நந்தா சரவணன்: மதில் சுவர் மட்டும்தான் கட்டி உள்ளனர். எந்த வேலையும் துவங்கவில்லை. துணை மின்நிலைய பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி: ஆரம்பக் கட்ட பணிகள் நடக்கிறது. மின்நிலையம் விரைவில் துவக்கப்படும்.