தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விதிமீறல் ரெஸ்டோ பார்களுக்கு 'சீல்' புதுச்சேரி கலால் துறை அதிரடி

விதிமீறல் ரெஸ்டோ பார்களுக்கு 'சீல்' புதுச்சேரி கலால் துறை அதிரடி

விதிமீறல் ரெஸ்டோ பார்களுக்கு 'சீல்' புதுச்சேரி கலால் துறை அதிரடி


ADDED : ஆக 12, 2025 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 02:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், விதிகளை மீறி நள்ளிரவில் இயங்கிய 13 ரெஸ்டோ பார்களை கலால் அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.

புதுச்சேரியில் சில்லரை மது விற்பனை கூடங்கள் மற்றும் பார்கள் 233 இயங்கி வருகிறது. இந்த மதுக்கடைகள் இரவு 10:30 மணி வரை இயங்கி வந்தது. இந்நிலையில் தற்போதைய அரசு, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 212 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளித்தது. இந்த ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12:00 மணி இயங்கவும், மேலும், பாடலை இசைக்கவிட்டு நடனமாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு மேலும் அதிக சத்தத்துடன் பாடல்களை போட்டு சுற்றுலா பயணிகள் நடனமாடியதால், குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்த புகாரை தொடர்ந்து கடந்தாண்டு, அப்போதைய கவர்னர் ராதாகிருஷ்ணன், விதிகளை மீறி நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் இயங்கும் ரெஸ்டோ பார்களின் உரிமத்தை 3 மாதம் ரத்து செய்வதோடு, ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்.

ஓரிரு மாதங்களுக்கு பின், ரெஸ்டோ பார்கள் வழக்கம் போல் நள்ளிரவை தாண்டி இயங்கி வந்தன. இந்நிலையில், புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பாரில், கடந்த 9ம் தேதி நள்ளிரவில் நடந்த தகராறில் சென்னை கல்லுாரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில், கலால் தனிப்படை குழுவினர் கடந்த 10ம் தேதி நகரில் உள்ள ரெஸ்டோ பார்களின் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த ஓ.எம்.ஜி., ரெஸ்டோ பார் உள்ளிட்ட 14 பார்கள், அனுமதி நேரத்தை கடந்து இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, கலால் தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர், அனுமதி நேரத்தை கடந்து இயங்கிய 14 ரெஸ்டோ பார்களின் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

மேலும், இந்த பார்களில், கொலை நடந்த பாரை தவிர்த்த மற்ற 13 பார்களுக்கு நேற்று 'சீல்' வைத்தனர். கொலை நடந்த ஓ.ஜி.எம்., ரெஸ்டோ பார், தற்போது போலீஸ் விசாரணைக்காக 'சீல்' வைக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us