தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி விவசாயிகள் கேரளா பயணம்

புதுச்சேரி விவசாயிகள் கேரளா பயணம்

புதுச்சேரி விவசாயிகள் கேரளா பயணம்


ADDED : செப் 27, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 08:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தோட்டக்கலை விவசாயிகள் 5 நாள் கற்றல் மற்றும் அனுபவ பயணமாக நேற்று கேரளா புறப்பட்டனர்.

தாவரவியல் பூங்காவில் துவங்கிய விவசாயிகள் பயணத்தை துணை வேளாண் இயக்குநர் சிவசுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பயணத்தில் புதுச்சேரியை சேர்ந்த 20 தோட்டக்கலை விவசாயிகள், கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், குடகு மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் மைசூர் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களை பார்வையிட உள்ளனர். இந்த பயணத்தில், வேளாண் அலுவலர்கள் சிவகுமார், சங்கரதாஸ் மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.

பயணத்தில், விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்களில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள் குறித்தும், தென்னை, மிளகு மற்றும் இதர தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, நீர்ப்பாசன முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இயற்கை வேளாண்மை, அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். 

மேலும், விவசாயிகள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தங்களது வயல்களில் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்னைகள் மற்றும் சாகுபடி தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று பயனடையலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us