/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அந்தமான் சுற்றுலா விடுதிக்கு புதுச்சேரி 'கேம் பிஷ்ஷிங் போட்'
/
அந்தமான் சுற்றுலா விடுதிக்கு புதுச்சேரி 'கேம் பிஷ்ஷிங் போட்'
அந்தமான் சுற்றுலா விடுதிக்கு புதுச்சேரி 'கேம் பிஷ்ஷிங் போட்'
அந்தமான் சுற்றுலா விடுதிக்கு புதுச்சேரி 'கேம் பிஷ்ஷிங் போட்'
ADDED : ஜன 07, 2024 04:59 AM

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் இருந்து அந்தமான் தீவிற்கு சொகுசு படகு செய்து அனுப்பும் பணி நடந்து வருகிறது.
வெளி நாடுகளில் கடலோர தங்கும் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கடலில் சென்று மீன் பிடித்து விளையாடி மகிழும் 'கேம் பிஷ்ஷிங் போட்' என்பது பிரபலமானது.
அதே போல் அந்தமான் தீவுகளில் உள்ள கடலோர தனியார் சுற்றுலா விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் கடலில் சென்று மீன் பிடித்து மகிழும் வகையில் 'கேம் பிஷ்ஷிங் போட்' களை சுற்றுலா விடுதிகள் வாடகைக்கு தருகின்றன.
அதையொட்டி, அந்தமானில் உள்ள ஒரு சுற்றுலா விடுதிக்கு புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பி.என்.டி. மெரைன் கிராப்ட் தனியார் படகு கட்டும் நிறுவனம் 10 லட்சம் ரூபாய் செலவில், உப்பளம் துறைமுகவளாக பணிமனையில் 'கேம் பிஷ்ஷிங் போட்' ஒன்றை தயார் செய்துள்ளது.
7.5 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் அகலத்தில் ஓட்டுநர் உள்பட ஏழு பேர் இந்த சொகுசு விசைப்படகில் அமர்ந்து பயணிக்கலாம். இந்த சொகுசு படகின் பணிகள் முடிந்து விரைவில் அந்தமானிற்கு அனுப்பப்பட உள்ளது.