தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி கவர்னர் டிஸ்மிஸ் ஏன் ?

புதுச்சேரி கவர்னர் டிஸ்மிஸ் ஏன் ?

புதுச்சேரி கவர்னர் டிஸ்மிஸ் ஏன் ?


ADDED : ஜூலை 12, 2014 10:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2014 10:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் இது வரை 5 மாநில கவர்னர்கள் தானாக வந்து ராஜினாமா செய்தார்கள். ஆனால் புதுச்சேரி கவர்னர் மட்டும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் பா.ஜ., அரசின் முதல் நீக்க கவர்னர் என்றும் பெயரெடுத்துள்ளார். இவரது மாற்றத்தில் பல்வேறு அரசியல் பின்னணி இருப்பதாக புதுச்சேரி வட்டாரம் தெரிவிக்கிறது.

மத்தியில் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் தங்களுக்கு தேவையான , நம்பிக்கை மிக்கவரை மாநில கவர்னராக நியமித்து கொள்ளும். இது போல் காங்., ஆட்சியில் காங்., மூத்த நிர்வாகிகள் உ.பி.,, ராஜஸ்தான், மிசோராம், மேற்குவங்கம், சட்டீஸ்கர், நாகாலாந்து, கோவா உள்ளிட்ட மாநிலங்களின் கவர்னர்கள் தங்களின் பதவியை இழந்தனர். புதிதாக பதவியேற்ற பின்னர் முந்தைய ஆட்சி கால கவர்னர்களை மாற்றம் செய்யும் பணியில் மோடி அரசு இறங்கியது. இதுவரை கவர்னர்கள் ராஜினாமா செய்வதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் புதுச்சேரி கவர்னர் வீரேந்திர கட்டாரியா பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இவரது டிஸ்மிஸ் பின்னணியில் அரசியல் விளையாட்டு நடந்திருக்கிறது.



என்.ஆர்.,காங்கிரஸ் ஆட்சி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை இங்கு என்.ஆர்.,காங்கிரஸ் ஆட்சி புரிகிறது. முதல்வர் ரங்கசாமி பா.ஜ.,வுடன் கூட்டணிவைத்து ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றினார். யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உண்டு. இதனால் முதல்வர் ரங்கசாமிக்கு எந்தவொரு நடவடிக்கையிலும் சுதந்திரமாக முடிவு எடுக்கக முடியாத நிலை உருவானது. எனவே கவர்னரை மாற்ற வேண்டும் என்பதே ரங்கசாமியின் முதல் கோரிக்கையாக பா.ஜ.,விடம் வைக்கப்பட்டது. இதன்படி ரங்கசாமியை திருப்திப்படுத்தும் விதமாக கவர்னர் கட்டாரியா அதிரடியாக நேற்று இரவு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். புதுச்சேரியை அந்தமான் ஆளுனர் அஜய் குமார் சிங் கூடுதலாக கவனிப்பார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



பட்டாசு வெடித்து : கவர்னர் மாற்றத்தை புதுச்சேரி காங்கிரசார் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இன்று மெகா பூசணி உடைக்கப்படுகிறது.



எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை தள்ளிப்போடவே புதிய கவர்னர்கள் நியமனம் இன்னும் செய்யப்படாமல் மத்திய அரசு சற்று பொறுமையாக இருந்து வருகிறது. புதிய கவர்னர் பட்டியலில் முரளிமனோகர் ஜோஷி முதலிடத்தில் உள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us