/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரும் 21ம் தேதி விடுமுறை புதுச்சேரி அரசு அறிவிப்பு
/
வரும் 21ம் தேதி விடுமுறை புதுச்சேரி அரசு அறிவிப்பு
வரும் 21ம் தேதி விடுமுறை புதுச்சேரி அரசு அறிவிப்பு
வரும் 21ம் தேதி விடுமுறை புதுச்சேரி அரசு அறிவிப்பு
ADDED : அக் 19, 2025 04:18 AM
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 21ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சார்பு செயலர் ஹிரண் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள் (தொழில்முறை கல்லுாரிகள் உட்பட) மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கி நிறுவனங்களுக்கும் வரும் 21ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.