/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
177 கட்டுமான உதவியாளர் பணியிடம் நிரப்ப புதுச்சேரி அரசு ஒப்புதல்
/
177 கட்டுமான உதவியாளர் பணியிடம் நிரப்ப புதுச்சேரி அரசு ஒப்புதல்
177 கட்டுமான உதவியாளர் பணியிடம் நிரப்ப புதுச்சேரி அரசு ஒப்புதல்
177 கட்டுமான உதவியாளர் பணியிடம் நிரப்ப புதுச்சேரி அரசு ஒப்புதல்
ADDED : மார் 17, 2025 02:40 AM
புதுச்சேரி: மின் துறையில் 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் இடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதுவரை 2,448 அரசு பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்து அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவித்தார்.
குறிப்பாக 2 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, அறிவிப்பு வெளியிட்டார். முதல்வரின் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் புதுச்சேரி மின் துறையில் 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐ.டி.ஐ., முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஒயர்மேன், போர்மேன், ஜே.இ., அடுத்தடுத்த பதவி உயர்வுகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மின் துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் கூறுகையில், 'மின் துறையில் 177 கட்டுமான உதவியாளர்கள் நேரடியாக நிரப்ப அரசு ஒப்புதல் தந்துள்ளது. இத்தேர்வானது மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இருக்கும். இதற்கென்று பிரத்யேக எழுத்து தேர்வு ஏதும் கிடையாது.
இதற்கான ஆன்லைன் போர்டல் ஒன்று தனியாக விரைவில் உருவாக்கப்பட உள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பிக்கும் முறை, மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் தொடர்பில் இருக்கவும்' என்றார்.