/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எளிதாக தீர்க்க வேண்டிய குடிநீர் பிரச்னைக்கு ரூ.500 கோடி செலவழிக்கும் புதுச்சேரி அரசு
/
எளிதாக தீர்க்க வேண்டிய குடிநீர் பிரச்னைக்கு ரூ.500 கோடி செலவழிக்கும் புதுச்சேரி அரசு
எளிதாக தீர்க்க வேண்டிய குடிநீர் பிரச்னைக்கு ரூ.500 கோடி செலவழிக்கும் புதுச்சேரி அரசு
எளிதாக தீர்க்க வேண்டிய குடிநீர் பிரச்னைக்கு ரூ.500 கோடி செலவழிக்கும் புதுச்சேரி அரசு
ADDED : அக் 05, 2025 01:14 AM
புதுச்சேரி:நீர் ஆதாரங்கள், ஆற்று படுகையில் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புகள் இருந்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், 500 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு செலவழிப்பதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி நகர பகுதி 294 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. மொத்த மக்கள் தொகை 9.50 லட்சம். நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை.
மாற்று திட்டங்கள் இதுவரை எந்த ஒரு பெரிய குடிநீர் திட்டங்களும் இன்றி, நிலத்தடி நீரை உறிஞ்சி, மக்களுக்கு குடிநீராக வினியோகித்து வந்தது புதுச்சேரி அரசு.
தற்போது வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்கள், பல நுாறு அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சு வதால், கடல் நீர் நிலத்தடி நீரில் கலந்துள்ளது.
இதனால் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல், மாற்று திட்டங்களை புதுச்சேரி அரசு முன்னெடுக்க துவங்கி உள்ளது. முதல்முறையாக, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக, 500 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பணிகள் துவங்க உள்ளன.
ஆனால், இந்த திட்டத்திற்கு செலவிடப்படும் தொகை மிக அதிகம். மேலும், திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின், பராமரிப்பு செலவும் அதிகம்.
புதுச்சேரி போன்ற சிறிய பரப்பளவு, குறைந்த மக்கள் தொகை கொண்ட நகருக்கு இந்த திட்டம் அவசியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உரிய பங்கு உண்டு மேலும், புதுச்சேரியில், 200க்கும் மேற்பட்ட குளங்கள், 84 பெரிய ஏரிகள் உள்ளன. புதுச்சேரியை ஒட்டி தென்பெண்ணை ஆறு, சாரங்கபாணி ஆறு ஆகியவை பயணிக்கிறது. காவிரி நீரில் புதுச்சேரிக்கு உரிய பங்கு உண்டு.
இவ்வளவு நீர் ஆதாரங்கள் உள்ள நிலையில், ஆற்று படுகையிலும், நீர் ஆதாரங்கள் அருகிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரலாம்.
தமிழகத்தில் ஒகேனக்கல், பாலாறு போன்ற ஆற்று படுகையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. அதே போல, புதுச்சேரியிலும் செயல்படுத்தினால், செலவு குறைவு. நீர் ஆதாரங்களும் மேம்படும்.
இதை தவிர்த்து, பெரும் தொகையை அரசு செலவிடுவதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.