/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னர் லண்டன் பயணம்
/
புதுச்சேரி கவர்னர் லண்டன் பயணம்
ADDED : ஜூலை 16, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், நேற்று முன்தினம் நள்ளிரவு லண்டன் புறப்பட்டு சென்றார்.
புதுச்சேரி அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஜான்குமார் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன், லண்டனில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு ராஜ்நிவாசில் இருந்து கார் மூலம் சென்னைக்கு சென்றார். அங்கிருந்து நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார். இவர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி புதுச்சேரி திரும்புகிறார்.