/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'குற்றச் சம்பவங்கள் அதிகரிப்புக்கு புதுச்சேரி அரசு வெட்கப்பட வேண்டும்' எதிர்க் கட்சித் தலைவர் சிவா ஆவேசம்

ADDED : அக் 18, 2024 06:12 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிக எண்ணிக்கையில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருந்தும் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதைக்கண்டு அரசு வெட்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றனர். மொத்தம், 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில், ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கட்டுப்பாட்டில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரியில், அதிகளவில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியில் இருந்தும் கொலை, திருட்டு, போதைப் பொருள் விற்பனை என பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.
இதைக்கண்டு புதுச்சேரி அரசு வெட்கப்பட வேண்டும். இங்கு போலீஸ் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது.
தவறு செய்ய ரவுடிகள் அஞ்சும் அளவிற்கு தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். போதைப் பொருட்கள் மாநிலத்திற்குள் வருவதை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
எந்த போலீஸ் எல்லையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதோ, அந்த போலீஸ் நிலையத்தின் அதிகாரிகள் முதல் கடைநிலை போலீசார் வரை அரசு பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். வரும் தீபாவளி பண்டிகையை வணிகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், அச்சமின்றி கொண்டாட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.