தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம்: 26 ஆயிரம் வர்த்தகர்கள், வியாபாரிகள் நிம்மதி

புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம்: 26 ஆயிரம் வர்த்தகர்கள், வியாபாரிகள் நிம்மதி

புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம்: 26 ஆயிரம் வர்த்தகர்கள், வியாபாரிகள் நிம்மதி


UPDATED : அக் 30, 2026 06:57 PM

ADDED : அக் 30, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 06:57 PM ADDED : அக் 30, 2026 06:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வரி செலுத்துவோரின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் புதுச்சேரி சர்க்யூட் பெஞ்ச் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மத்திய ஜி.எஸ்.டி., வரியின் கீழ் 11 ஆயிரம் பேர், மாநில ஜி.எஸ்.டி கீழ் 15 ஆயிரம் பேர் என 26 ஆயிரம் பேர் உள்ளனர். முறையாக வரி செலுத்தாமல் இருத்தல், வரி ஏய்ப்பு செய்தல் போன்றவற்றுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., கணக்குகளை உரிய தேதிக்குள் தாக்கல் செய்யத் தவறினால் தாமத கட்டணம் மற்றும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இதுபோன்று அபராதம் விதிக்கும்போது ஜி.எஸ்.டி., முதல் மேல்முறையீட்டு அதிகாரியிடம் முறையிடலாம். அவர் வழங்கிய உத்தரவுகளில் திருப்தி அடையாதவர்கள், ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

இருப்பினும் புதுச்சேரியில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இல்லாத சூழ்நிலையில் சென்னை போன்ற பிற நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது.

புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக வர்த்தகர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்து வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள ஓம் சக்தி என்.எஸ்.சி., போஸ் ஹாலில் ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் புதுச்சேரி சர்க்யூட் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. புதுடில்லியில் உள்ள ஜி.எஸ்.டி,, மேல்முறையீட்டு தீர்ப்பாயாத்தின் முதன்மை பெஞ்ச் தலைவர் சஞ்சய குமார் மிஸ்ரா காணொலி வாயிலாக சர்க்யூட் பெஞ்சை தொடங்கி வைத்தார். விழாவில், புதுச்சேரி மத்திய ஜி.எஸ்.டி., ஆணையர் மிலிந்த் லஞ்சேவார், அரசு செயலர் அனுாப் தாகூர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, புதுச்சேரி சர்க்யூட் பெஞ்சின் முதல் வழக்கு விசாரணையும் நடந்தது.

புதிய நடைமுறையின்படி, ஒவ்வொரு மாதமும் 4-வது மற்றும் 5-வது வெள்ளிக்கிழமைகளில் புதுச்சேரி சர்க்யூட் பெஞ்சில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த அமர்வுகளில் ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் துணைத் தலைவர் பிரவீன் குமார் ஜெயின் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் ஷேக் காதர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரிக்கும்.

எளிதாக அணுக முடியும்


சென்னை பெஞ்சின் தொழில்நுட்ப உறுப்பினர் ஷேக் காதர் ரஹ்மான் கூறுகையில், ‘புதுச்சேரிக்கு தனியாக சர்க்யூட் பெஞ்ச் அமைக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். இதன் மூலம் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வரி செலுத்துவோரும், வர்த்தகர்களும் மேல்முறையீட்டு வழக்குகளுக்கு தீர்ப்பாயத்தை மிக எளிதாக அணுக முடியும்’ என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us