/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - ஹைதராபாத் - பெங்களூரு விமான சேவை மீண்டும் துவங்கியது
/
புதுச்சேரி - ஹைதராபாத் - பெங்களூரு விமான சேவை மீண்டும் துவங்கியது
புதுச்சேரி - ஹைதராபாத் - பெங்களூரு விமான சேவை மீண்டும் துவங்கியது
புதுச்சேரி - ஹைதராபாத் - பெங்களூரு விமான சேவை மீண்டும் துவங்கியது
ADDED : டிச 21, 2024 07:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி - ஹைதராபாத் - பெங்களூரு இடையிலான விமான சேவையை கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்திற்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டது. கடந்த மார்ச் 30ம் தேதி முதல் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
மீண்டும் விமான சேவை துவக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இண்டிகோ நிறுவனம் விமான சேவையை துவக்க முன் வந்தது. அதையடுத்து புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை நேற்று துவங்கியது. காலை 11:00 மணிக்கு பெங்களூருவில் இருந்து 78 இருக்கை கொண்ட இண்டிகோ சிறிய ரக விமானம் 74 பயணிகளுடன் புறப்பட்டது.
மதியம் 12:25 மணிக்கு புதுச்சேரி வந்த விமானத்திற்கு தண்ணீர் பீச்சி அடித்து 'வாட்டர் சல்யூட்' வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் வந்த பயணிகளுக்கு பூ மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
மதியம் 12:45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து 63 பயணிகளுடன் ஹைதராபாத்திற்கு விமானம் புறப்பட்டது. விமான சேவையை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், வைத்தியநாதன், தலைமை செயலர் சரத் சவுக்கான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை செயலர் ஜெயந்த் குமார் ரே, இயக்குநர் முரளிதரன், விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

