தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா சீனியர் எஸ்.பி., இஷா சிங் இடமாற்றம்

 புதுச்சேரி ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா சீனியர் எஸ்.பி., இஷா சிங் இடமாற்றம்

 புதுச்சேரி ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா சீனியர் எஸ்.பி., இஷா சிங் இடமாற்றம்


ADDED : ஜன 05, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஐ.ஜி., அஜித் குமார் சிங்லா, சீனியர் எஸ்.பி., இஷா சிங், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுதும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அக்முத் கேடர் பிரிவில் பணியாற்றும் 31 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 18 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், புதுச்சேரியில் பணியா ற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டில்லியில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கின்னி சிங் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.

இதேபோல், புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா, விஜிலென்ஸ் சீனியர் எஸ்.பி., இஷா சிங் ஆகியோர் புதுச்சேரியில் இருந்தும் டில்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஜம்மூ காஷ்மீரில் பணியாற்றும் 2014ம் ஆண்டு ஐ.பி.எஸ்., ராஜிந்தர் குமார் குப்தா புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவினை மத்திய உள்துறை சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us