/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி விடுதலை தின விழா : அனைத்து துறை ஆலோசனை
/
புதுச்சேரி விடுதலை தின விழா : அனைத்து துறை ஆலோசனை
ADDED : அக் 18, 2025 07:44 AM

புதுச்சேரி: புதுச்சேரி விடுதலை தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி விடுதலை தின விழா நவம்பர் 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரம் துறை அரசு செயலர் முகமது அஹ்சன் அமித் தலைமையில் தலைமைச் செயலக கருத்தரங்க கூடத்தில் நடந்தது.
புதுச்சேரி விடுதலை தின விழாவை சிறப்பாக நடத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
கிழக்கு எஸ்.பி., ஸ்ருதி எரகட்டி, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் முனுசாமி, காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, நலவழித்துறை, சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை, வேளாண்துறை, புதுச்சேரி நகராட்சி, விடுதலைப் போராட்ட வீரர் பிரிவு, முப்படை நலத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.