/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி போதை பொருட்களின் கேந்திரமாக உள்ளது:
/
புதுச்சேரி போதை பொருட்களின் கேந்திரமாக உள்ளது:
ADDED : பிப் 28, 2024 10:56 PM
புதுச்சேரி: புதுச்சேரி போதை பொருட்களின்கேந்திரமாக மாறி உள்ளது என அ.தி.மு.க. விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல், மதுபானம் வழக்கமாக கடத்தப்படும்.
தற்போது உயர்ரக போதை பொருள் விற்கும் மாநிலமாக போதை பொருள் கேந்திரமாக மாறி உள்ளது. பா.ஜ., அரசு ரெஸ்டோ பார் என்ற பெயரில் தன் ஆதரவாளர்களை சட்டவிரோத செயலில் ஈடுப்பட அனுமதி கொடுத்துள்ளது.
ரெஸ்டோ பாரில் மது விற்பனை, ஆடல்பாடல், விபச்சாரம் என மாறி தற்போது சுற்றுலா பயணிகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறது. போதை பொருளால் கோவா சீரழிந்ததால், அங்கு ரெஸ்டோ பார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சமுதாய சீரழிவின் கடைசி நிலைக்கு சென்றுள்ளது.அரசும், கவர்னரும் இதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஒரு தலைமுறையை வீணாக்கும் செயல். மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு புதுச்சேரியில் முகாமிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும்.
பள்ளி கல்லுாரி, சுற்றுலா பயணிகள் மத்தியல் போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் இந்திய அளவில் புதுச்சேரி மோசமான நிலைக்கு செல்லும்.
போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என கூறினார்.

