இரட்டை இன்ஜின் ஆட்சியில் புதுச்சேரி மிளர்கிறது: பா.ஜ., அண்ணாமலை புகழாரம்
இரட்டை இன்ஜின் ஆட்சியில் புதுச்சேரி மிளர்கிறது: பா.ஜ., அண்ணாமலை புகழாரம்
ADDED : ஏப் 05, 2026 06:20 AM
வில்லியனுார்: இரட்டை இஞ்சின் ஆட்சியில் புதுச்சேரி மிளிர்கிறது என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
வில்லியனூர் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;
புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் ரங்கசாமி முதல்வராக வரவேண்டும். இது சாதாரண தேர்தல் அல்ல. புதுச்சேரி மிகப்பெரிய மாநிலமாக, நகரமாக மாறுவதற்கான தேர்தல். மத்தியில் காங்., ஆட்சி இருந்தபோது புதுச்சேரிக்கு 10 ஆண்டுகளில் ரூ. 9 ஆயிரம் கோடி மட்டுமே நிதிப்பகிர்வு கொடுத்துள்ளது.
தற்பொது மோடி ஆட்சியில் ரூ. 26 ஆயிரம் கோடி நிதியை புதுச்சேரிக்கு கொடுத்துள்ளார். புதுச்சேரியில் காங்., ஆட்சியில் டில்லிக்கு ஏ.டி.எம்.,மாகத்தான் இருந்தது. முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு 5 ஆண்டு காலத்தில் புதுச்சேரியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். கடந்த மாதம் புதுச்சேரிக்கு வந்த பிரதமர், ஒரே நாளில் ரூ.2,700 கோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இரட்டை இஞ்சின் அரசு சேர்ந்தால் எப்படி புதுச்சேரி மிளிரும் என்பதற்கு கடந்த 5 ஆண்டு கால ஆட்சியை சாட்சி. இளைஞர்கள் வேலைக்காக வெளியே சென்றனர். இப்போது பெரிய நிறுவனங்கள் புதுச்சேரி நோக்கி வருகின்றன. லேப்டாப் தயாரிக்கும் நிறுவனம், சோகோ நிறுவனமே இதற்கு சாட்சி.
அடுத்த 5 ஆண்டுகளில், புதுச்சேரி விமான நிலையம் 1.5 கிலோ மீட்டர் ஓடுதளம் 2.3 கிலோ மீட்டர் ஓடுதளமாக மாற்றினால் பெரிய விமானங்கள் வந்து செல்லும். அதற்காக ரூ. 4 ஆயிரம் கோடிக்கான மாஸ்டர் பிளான் மத்திய அரசு கொடுத்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும்.
எனவே, முதல்வர் ரங்கசாமி மீண்டும் முதல்வராக நமது வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்' என்றார்.
