புதிய வணிக சீர்திருத்த சட்ட மசோதாவிற்கு புதுச்சேரி லகு உத்யோக் பாரதி வரவேற்பு
புதிய வணிக சீர்திருத்த சட்ட மசோதாவிற்கு புதுச்சேரி லகு உத்யோக் பாரதி வரவேற்பு
ADDED : ஆக 26, 2026 08:21 PM
புதுச்சேரி: அரசின் புதிய வணிக சீர்திருத்த சட்ட மசோதாவிற்கு (2026) லகு உத்யோக் பாரதி புதுச்சேரி கிளை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி கிளை லகு உத்யோக் பாரதி வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி அரசு அறிவித்த புதிய வணிக சீர்திருத்த சட்ட மசோத, சிறுதொழில் தொடங்க அரசின் ஆரம்ப அனுமதிகளுக்கு 5 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 1 ஆண்டுகள் நீடிக்கலாம். குறித்த காலத்திற்குள் அரசு சான்றிதழ் வழங்காவிட்டால், கணினி மூலமாக தானாகவே சான்றிதழ் கிடைக்கும். தொழில் அதிபர்கள் ஒரே இடத்தில் அனைத்து அரசு சேவைகளையும் விரைவாக பெறலாம்.
தேவையில்லாத சிக்கலான விதிகளும் பழைய நடைமுறைகளும் நீக்கப்படும். தீ பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு விதிகளில் எந்த சமரசமும் இருக்காது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நன்மைகள் இந்த சட்ட மசோதவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதவை தலைவர் விஸ்வேஸ்வரன், பொதுச்செயலாளர் அசோக், தேசிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
