/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வழக்கறிஞர்கள் கபடி போட்டியில் வெற்றி
/
புதுச்சேரி வழக்கறிஞர்கள் கபடி போட்டியில் வெற்றி
ADDED : அக் 02, 2024 03:48 AM

புதுச்சேரி : வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த கபடி போட்டியில், புதுச்சேரி வழக்கறிஞர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் வழக்கறிஞர்களுக்கு இடையே இரண்டு நாள் கபடி போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்று இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகர், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், சங்க பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ் முன்னிலையில் வீரர்கள் கோப்பையை பெற்றுக் கொண்டனர். விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சங்கத்தின் சார்பில், வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.