/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் நான்குமுனை போட்டி: 26 வேட்பாளர்கள் களத்தில்
/
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் நான்குமுனை போட்டி: 26 வேட்பாளர்கள் களத்தில்
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் நான்குமுனை போட்டி: 26 வேட்பாளர்கள் களத்தில்
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் நான்குமுனை போட்டி: 26 வேட்பாளர்கள் களத்தில்
ADDED : ஏப் 04, 2024 12:38 AM

புதுச்சேரியில் இதுவரை 15 லோக்சபா தேர்தலும், 1 இடைத்தேர்தலும் நடந்துள்ளன. இங்கு, முதல் லோக்சபா தேர்தல் நடந்த 1963 ஆண்டில் ஆரம்பித்து, 1984ம் ஆண்டு வரை, இருமுனை போட்டியே நிலவியது. இந்த தேர்தல்களில், காங்., கட்சியும், மற்ற கட்சிகளும் நேருக்கு நேராக சந்தித்தன.
கடந்த 1989 ஆண்டு தேர்தலில், காங்., தி.மு.க., ஆகிய கட்சிகளுடன், பா.ம.க.,வும் களமிறங்கியதால், மூம்முனை போட்டி ஏற்பட்டது. பிறகு நடந்த தேர்தல்களில், பா.ஜ., கோதாவில் குதித்தால், நான்கு முனை போட்டி உருவானது.
முதல் லோக்சபா தேர்தலின்போது, மூன்று வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் களத்தில் இருந்தனர். இந்த எண்ணிக்கை, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து, 2014ம் ஆண்டு தேர்தலின்போது, 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அடுத்து 2009ம் ஆண்டு தேர்தலில் 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடைசியாக, 2019 ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், 18 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
தற்போது 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வரலாற்றில் மூன்றாவது முறையாக அதிகபட்சமாக 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., - நாம் தமிழர் என நான்குமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இவர்களில் பலர் டிபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தாலும் மறுபடியும் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்க டிபாசிட் தொகையை தேர்தல் ஆணையம் அதிரடியாக உயர்த்தி நடவடிக்கை எடுத்தது. அதன் மூலம் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்று கணக்கு போட்டால் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கத்தான் செய்கிறது. பாதுகாப்பு கொடுப்பதிலும் சிக்கல்தான் ஏற்படுகிறது. இதனால் டிபாசிட் தொகையை மேலும் கூட்டுவது தான் சிறந்தது.
இன்றை நிலையில் 25 ஆயிரம் ரூபாய் தேர்தலில் நிற்க இது அதிக தொகை கிடையாது. 1998ல் டிபாசிட் தொகை ரூ.500லிருந்து ரூ.10,000ஆக கூடுதலாக்கியது தேர்தல் கமிஷன். பின்னர் 2009ல் அதிகரித்து ரூ.25,000மாக ஆக்கியது. ஆனால் வேட்பாளர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.தேர்தலில் போட்டியிடுவது தப்பில்லை. குறைந்தபட்ச ஆயிரம் ஓட்டுகள் வாங்கினால் கூட பரவாயில்லை.
ஆனால் 100 ஓட்டுகள் கூட வாங்க முடியாதவர்களும், சுயேச்சையாக போட்டியிடுவதால் தேர்தலுக்கு தேர்தலுக்கு அதிகரிக்கும் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒன்றா.. இரண்டா...
மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் ஒன்றில், அதிகபட்சமாக,16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம் பெற முடியும். நோட்டா என்ற, யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாததை பதிவு செய்வதற்கு, ஒரு பட்டன் ஒதுக்கப்படும். எனவே, இந்த லோக்சபா தேர்தலில் 26 வேட்பாளர் போட்டியிடுவதால், இரண்டு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களை பயன்படுத்தப்பட உள்ளது. முதல் ஒட்டு பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற உள்ளது.
இரண்டாவது ஓட்டு பதிவு இயந்திரத்தில் 10 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெறும். கடைசியாக நோட்டோ பட்டன் இடம் பெறுவது குறிப்பிடதக்கது.

