ADDED : பிப் 07, 2026 02:38 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் ரூ. 11 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவர் ஆன்லைன் பந்தய விளையாட்டு செயலியில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைப்பது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து, ஆன்லைன் பந்தய விளையாட்டு செயலியில் பல்வேறு தவணைகளாக ரூ. 10 லட்சம் முதலீடு செய்து ஆன்லைன் கேம் விளையாடினார்.
ஆனால், தெரிவித்தபடி லாப பணம் ஏதுவும் அவருக்கு வரவில்லை. மேலும், அவரது கணக்கு முடக்கப்பட்டது. அதன் பிறகே சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், வில்லியனுாரை சேர்ந்த பெண் 9 ஆயிரம், பிள்ளைச்சாவடியை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 480, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 50 ஆயிரம், பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் 35 ஆயிரம், வில்லியனுாரை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 250, என, 6 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 11 லட்சத்து 4 ஆயிரத்து 730 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
