ADDED : ஏப் 07, 2026 10:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த நபர், போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து, ரூ.1.26 கோடியை இழந்தார்.
புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்தவரை வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதைநம்பிய, அவர் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 26 லட்சம் முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
அதன் பின், மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரூ.50,000 சைபர் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். புகார்களில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
