தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி


ADDED : டிச 16, 2025 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாக சண்முகாபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ. 66 ஆயிரத்தை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.

புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேசியுள்ளார். அதில், குறைந்த வட்டியில் ரூ. 5 லட்சம் வரை லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து, பல்வேறு தவணைகளாக மர்மநபருக்கு ரூ. 66 ஆயிரத்து 200 செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல், வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்தவர் 12 ஆயிரம் என 2 பேர் மோசடி கும்பலிடம் 78 ஆயிரத்து 200 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us