/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 அரசு அலுவலகங்களில் ஆர்.ஆர்.ஆர்., மையங்கள்; மறுசுழற்சிக்காக புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு
/
3 அரசு அலுவலகங்களில் ஆர்.ஆர்.ஆர்., மையங்கள்; மறுசுழற்சிக்காக புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு
3 அரசு அலுவலகங்களில் ஆர்.ஆர்.ஆர்., மையங்கள்; மறுசுழற்சிக்காக புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு
3 அரசு அலுவலகங்களில் ஆர்.ஆர்.ஆர்., மையங்கள்; மறுசுழற்சிக்காக புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு
ADDED : நவ 04, 2024 05:54 AM

புதுச்சேரி : புதுச்சேரி நகராட்சி பகுதியில் மூன்று இடங்களில் பொருட்களைதரம் பிரித்து சேகரிக்க, ஆர்.ஆர்.ஆர்., மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் துாய்மையே சேவை என்கின்ற தொடர் துாய்மை பணி புதுச்சேரி நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நிலையான கழிவு மேலாண்மை மற்றும் வள பாதுகாப்பு மையங்கள், ஆர்.ஆர்.ஆர்., என்ற பெயரில்,கம்பன் கலையரங்கம்,முதலியார்பேட்டை பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகம், நெல்லித்தோப்பு உதவி பொறியாளர்-2 ஆகியமூன்று அரசு அலுவலகங்களில்நிறுவியுள்ளது.
இதன்படி மறுசுழற்சி செய்து புதியவற்றை உருவாக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைநகர்ப்புற உள்ளாட்சித் துறையுடன் இணைந்து, புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஸ்வச் பாரத் மிஷன் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறுகையில், 'தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்கும் விதத்தில் இந்த ஆர்.ஆர்.ஆர்., மறுசுழற்சி மையங்களை ஏற்படுத்தியுள்ளோம். இதில் பணியாளர்கள் இருப்பர். இவர்களிடம் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உபயோகமில்லாமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், ஆடைகள், புத்தகங்கள், மின்சார பொருட்களை அலுவலகங்களுக்கு வந்துகொடுக்கலாம்.
இல்லையெனில், மறுசுழற்சி மையங்களின் பெட்டிகளில் போடலாம். இவற்றை பெற்ற பிறகு தேவைப்படுவோருக்கு இந்த பொருட்கள் கொடுக்கப்படும். இந்த முயற்சி மூலம் நிலையான கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதோடு, கழிவுகளை குறைக்கவும் உதவும். பொதுமக்களுக்கும் சமூகத்தின் மீதான அக்கறையும் வெளிப்படும்' என்றார்.