sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் : அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

/

பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் : அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் : அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் : அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : ஜூலை 23, 2011 11:59 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிராந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என, மாநில அ.தி.மு.க.,செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.



இதுகுறித்து, நிருபர்களிடம், அவர் கூறியதாவது: ரங்கசாமி அரசு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அரசின் உரிய இடஒதுக்கீட்டை பெற தவறிவிட்டது.

தனியார் கல்லூரிகளில் 265 சீட் மட்டுமே கேட்டு பெற்றுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள், 105 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டைப் பெறவும், அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புதுச்சேரியில் 4 நிகர்நில பல்கலைக்கழங்கங்களாக மாறியுள்ள அறுபடை வீடு, லட்சுமிநாராயணா, விநாயகா மிஷன், மகாத்மா காந்தி ஆகிய மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடான 122 இடங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. கட்டணமாக நான்கரை லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் 143 இடங்கள் பெறப்பட்டுள்ளது. இங்கு கட்டணமாக இரண்டரை லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் சீரான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். ரங்கசாமி, மெஜாரிட்டியைக் காண்பிக்க நியமன எம்.எல்.ஏ.,க்களைப் பயன்படுத்துவார். எனவே நியமன எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கக் கூடாது என்று ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினோம். தற்போது, மீண்டும் பட்டியல் தரப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அ.தி.மு.க., சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அன்பழகன் கூறினார். பெரியசாமி எம்.எல்.ஏ., உடனிருந்தார்.










      Dinamalar
      Follow us