ADDED : ஜூலை 25, 2011 12:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி கல்வித் துறை ரொட்டி பால் ஊழியர் சங்கத்தினர் மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து கல்வித்துறை வளாகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கத் தலைவி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் லதா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொது செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார். தர்ணா போராட்டத்தில் நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்ப ளத்தை வழங்க வேண்டும். அனைத்து ரொட்டி பால் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைவர் மதுரகவி, பொறுப்பாளர்கள் மதிவாணன், சரவணன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.