sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பிரதமருடன் ரங்கசாமி சந்திப்பு

/

பிரதமருடன் ரங்கசாமி சந்திப்பு

பிரதமருடன் ரங்கசாமி சந்திப்பு

பிரதமருடன் ரங்கசாமி சந்திப்பு


ADDED : ஜூலை 27, 2011 01:13 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிரதமர் மன்மோகன்சிங்கை, முதல்வர் ரங்கசாமி நேற்று சந்தித்து பேசினார்.

திட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் இரவு டில்லிக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு முதல்வர் ரங்கசாமி நேற்று காலை சென்றார். முதல்வருடன் அகில இந்திய என்.ஆர். காங்., கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் சென்றிருந்தார். புதுச்சேரி அரசியல் நிலவரம் தொடர்பாகவும், புதுச்சேரி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பிரதமருடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். மேலும், புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 3645 கோடி ரூபாயை சிறப்பு நிதியுதவியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் மனு அளித்தார். புதுச்சேரியின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பிரதமரை ரங்கசாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us