ADDED : ஜூலை 27, 2011 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனூர் : தொண்டமாநத்தம் வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழு நியமன ஆணையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நிர்வாகிகளிடம் வழங்கினார்.
வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள வரதராஜபெருமாள் தேவஸ்தானத்திற்கு புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் துறை ஒப்புதலுடன் அறங்காவல் குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேவஸ்தான தலைவராக மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். சிவராஜ், ஜெயராமன், பிரகாஷ்குப்தா மற்றும் பூவராகவன் ஆகியோர் துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவஸ்தான புதிய அறங்காவல் குழு தேர்வுக் கான ஆணையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த் தினார்.