ADDED : ஜூலை 27, 2011 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனூர் அருகே ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
புதுச்சேரி முத்துப்பிள்ளைப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், 38. கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை வெள்ளிசாமி நகர் (ரயில்வே கிராஸ்) வழியாக நடந்து வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி ரயில் ஒன்று வந்தது. ரயில் வருவதற்குள் சென்று விடலாம் என்று கருதி ரயில் தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது, முத்துக்கிருஷ்ணன் மீது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். வில்லியனூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.