/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் ஏரியில் உயிரினங்களுக்கு பாதிப்பின்றி தூர்வார வேண்டும்
/
பாகூர் ஏரியில் உயிரினங்களுக்கு பாதிப்பின்றி தூர்வார வேண்டும்
பாகூர் ஏரியில் உயிரினங்களுக்கு பாதிப்பின்றி தூர்வார வேண்டும்
பாகூர் ஏரியில் உயிரினங்களுக்கு பாதிப்பின்றி தூர்வார வேண்டும்
ADDED : ஜூலை 27, 2011 11:42 PM
பாகூர் : பாகூர் ஏரியில் வாழும் உயிரினங்களுக்கு அழிவு ஏற்படுத்தாத வகையில் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியாக பாகூர் ஏரி திகழ்கிறது.
இங்கு அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடி, கொடிகள் வளர்வதுடன், அடர்ந்த புதர்களில் அரிய வகை பறவைகளும், விலங்குகளும் வசித்து வருகின்றன. இந்நிலையில் குடியிருப்புப்பாளையம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பாகூர் ஏரியின் மதகு பகுதியில் கடந்த 4ம் தேதி நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடியிருப்புப்பாளையம் மதகு பகுதியை ஆழப்படுத்தும் பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணியின் போது ஏரியில் உள்ள அடர்ந்த புதர்களை வெட்டி அகற்றுவதோடு, அவற்றை தீ வைத்து எரிக்கின்றனர். இதிலிருந்து வரும் வெப்பத்தால் அங்கு வசித்து வரும் சிறிய பறவைகள், விலங்குகள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் அழிகின்றன.எனவே இங்கு வாழும் உயிரினங்களுக்கு அழிவு ஏற்படுத்தாத வகையில், நூறு நாள் திட்ட தொழிலாளர்களை, பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.