ADDED : ஜூலை 27, 2011 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராய நாயகர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆற்றுப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை சுகுணா வரவேற்றார். தலைமையாசிரியை பிரேமவிலாசினி தலைமை தாங்கினார். இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி குழந்தை நல நிபுணர் எடிட் பெர்னதெத் ஜாஸ்மின், வளரிளம் பெண்களுக்கான உணவுப் பழக்க முறைகள் மற்றும் அதன் அவசியம் குறித்து விளக்கம் அளித்தார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆலோசகர்கள் கலா, சியாமளாதேவி செய்தனர். ஆசிரியை உதயகுமாரி நன்றி கூறினார்.