நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அட்டவணை இன மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நல அமைச்சர் ராஜவேலுவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.கூட்டமைப்பின் தலைவர் ராமலிங்கம், கவுரவத் தலைவர் வீரபத்திரசாமி, ஆலோசகர் ராமமூர்த்தி, துணைத் தலைவர்கள் நந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் அமைச்சர் ராஜவேலுவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அவருக்கு வாழ்த்து கூறிய நிர்வாகிகள், புதுச்சேரியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களின் நலப்பணிகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து விளக்கினர். பூர்வீக மக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.