/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
/
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
காரைக்காலுக்கு தனி பட்ஜெட் போராட்டக்குழு கேட்கிறது
ADDED : ஆக 01, 2011 02:41 AM
காரைக்கால் : காரைக்காலுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து, தடையின்றி நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டக்குழு போராட்டங்களை அறிவித்துள்ளது.காரைக்கால் போராட்டக்குழுவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நிறுவனர் ராமசீனிவாசன் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். போராட்டக் குழு அமைப்பாளர் வக்கீல் செல்வ சண்முகம் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பேசினார். முன்னதாக உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பொன் பன்னீர்செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் பக்கிரிசாமி, முனுசாமி, கணபதி, ஹாஜா நஜிமுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் காரைக்காலை கடந்த 7 ஆண்டுகளாக தனி யூனியன் பிரதேசம் கேட்டு போராடியும், பிரச்னைகள் குறித்து புதுச்சேரி அரசு அக்கறை செலுத்தவில்லை. புதுச்சேரி அரசின் கீழ் காரைக்கால் பகுதி மக்களுக்கு நன்மை கிடையாது. மத்திய அரசு கூர்கா பிரதேசத்திற்கு தனி நிர்வாக அமைப்பை உருவாக்கியதுபோல், காரைக்காலுக்கு தனி யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கவேண்டும்.
நாட்டில் லஞ்சம், ஊழல் பெருத்துவிட்டது. கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை. மாறாக ஊழலில் ஈடுபடும் பிரதமர், நீதிபதிகளைப் பாதுகாக்கும் கேடயமாக லோக்பால் மசோதாவை உருவாக்கியிருப்பது மக்களுக்கு எதிரான செயல். மன்மோகன் சிங் நாட்டை ஆளும் உரிமையை இழந்துவிட்டார். ஆகவே அவர் பதவி விலகவேண்டும்.காரைக்காலை தூய்மையான நகரமாக்க அரசு சிறப்புத் திட்டத்தை வகுத்து, உரிய நிதியை வழங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் வரை காரை பகுதிக்கு தனி பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, காரை பகுதி திட்டங்களுக்கு தடையின்றி நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம், பிரசாரம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.