/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெல்ஜியம் நாட்டு கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சி
/
பெல்ஜியம் நாட்டு கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சி
ADDED : ஆக 01, 2011 02:41 AM
கிருமாம்பாக்கம் : பெல்ஜியம் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் கிருமாம்பாக்கத்தில் நடந்தது.கிருமாம்பாக்கத்தில் அவதாரங்கள் கலைக்குழு சார்பில் மாலை நேர பாடசாலை நடத்தப்பட்டு வருகிறது.
இப் பாடசாலைக்கு, பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 12 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். கிருமாம்பாக்கம் மந்தைவெளித் திடலில் மழைத் திண்ணிகள் என்ற விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.நாடகத்தில் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம், அழிந்து வரும் விவசாய நிலங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அவதாரங்கள் கலைக்குழுத் தலைவர் அருணகிரி, ஓவியர் சரவணன், ரத்தினவேலு, பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.