/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிம்ஸ் மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா
/
பிம்ஸ் மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 01, 2011 02:41 AM
புதுச்சேரி : கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா, கல்லூரி அரங்கில் நடந்தது.கல்லூரி துணை முதல்வர் டாக்டர் அனில் பூர்த்தி வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேம்ஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லூரி சேர்மன் டாக்டர் ஜேக்கப் மருத்துவ மாணவ, மாணவிகளின் சாதனைகளைப் பாராட்டி பரிசும், சான்றிதழும் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக மணிப்பால் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ஹெக்டே பங்கேற்று, 2006ம் ஆண்டில் பயின்ற 85 இளங்கலை மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கும், 16 முதுகலை மருத்துவ மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார்.விழாவில் அவர் பேசுகையில், நல்ல கல்வி நிறுவனங்களால் மட்டுமே திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்.நீங்கள் செய்த முயற்சிக்குக் கிடைத்த பலன் தான் இந்த மருத்துவ பட்டம்.
இது துவக்கம் தான். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நோயாளிகளிடம் நீங்கள் காட்டக்கூடிய அன்பு தான் நோயை குணப்படுத்தும். பணத்தை விட, நல் இதயம் கொண்ட மருத்துவராக திகழ வேண்டும்.இந்தப் பட்டங்களைப் பெற காரணமாக இருந்த பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். எதிர்காலத்தில் நீங்களும், ஒரு ஆசிரியராக மாற வாய்ப்பு ஏற்படும். இதனால் உங்கள் ஆசிரியர்களை மறக்கக் கூடாது என்றார்.விழாவையொட்டி, கல்லூரியில் படித்ததன் நினைவாக மாணவ, மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். கல்லூரி நிதி கட்டுப்பாட்டு அதிகாரி ஜான், பொது மேலாளர் ரஞ்சித் , மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் நாயர், டாக்டர் உதித், பிம்ஸ் மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.டாக்டர் ரேணு நன்றி கூறினார்.