/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விக்ரம் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை
/
விக்ரம் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை
ADDED : ஆக 03, 2011 01:30 AM
புதுச்சேரி : பழைய வழித்தடத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் காலி செய்யப்பட்டதால் புதிய வழித்தடத்தில் அனுமதி அளிக்க வேண்டும் என பாரத மாதா விக்ரம் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சங்க செயலாளர் முருகையன் நிருபர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி அரசு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதி டெம்போவுக்கு சில வழித்தடங்களை வழங்கியது. இந்நிலையில் பல் மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை, கோர்ட் உள்ளிட்ட மக்கள் வந்து போகும் இடங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விக்ரம் உரிமையாளர்களும், ஓட்டுனர்களும் பாதிக்கப்பட்டு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் இருந்து பொது மருத்துவமனை, இந்திராகாந்தி சிலை, குழந்தைகள் நல மருத்துவமனை வழியாக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி வரை வழித்தடத்தை நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பல்வேறு வழித்தடங்களில் 'டாடா ஏஸ்' வாகனம் இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் அடிப்படையில் 500க்கும் மேற்பட்டவர்கள் 1000 ரூபாய் முன்பணம் செலுத்தி வழித்தடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

