/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாகாத்தம்மனுக்கு 108 குட பால் அபிஷேகம்
/
நாகாத்தம்மனுக்கு 108 குட பால் அபிஷேகம்
ADDED : ஆக 03, 2011 01:32 AM
புதுச்சேரி : ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு கொட்டுப்பாளையம் நாகாத்தம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது.
கொட்டுப்பாளையம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு, அம்மனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் நடந் தது. முன்னதாக கோவிலில் இருந்து பெண்கள் 108 பால் குடங்களை தலையில் சுமந்து பாக்க முடையான்பட்டு, புதுப்பேட்டை வழியாக மீண்டும் கொட்டுப்பாளையம் வந்தனர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின் கலசாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்துடன் விநாயகர், முருகன், நாகாத்தம்மன் வீதியுலா நடந்தது.

