/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிராவல்ஸ் உரிமையாளர் கடத்தல் வழக்கு: கடலூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது
/
டிராவல்ஸ் உரிமையாளர் கடத்தல் வழக்கு: கடலூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது
டிராவல்ஸ் உரிமையாளர் கடத்தல் வழக்கு: கடலூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது
டிராவல்ஸ் உரிமையாளர் கடத்தல் வழக்கு: கடலூரைச் சேர்ந்த நான்கு பேர் கைது
ADDED : ஆக 03, 2011 01:32 AM
புதுச்சேரி : டிராவல்ஸ் உரிமையாளரை காருடன் கடத்திச் சென்ற வழக்கில் கடலூரைச் சேர்ந்த நால்வரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
வேலூர் திருநகர் விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் டேனியல்,36; கோழிப் பண்ணை மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். விழுப்புரம் அருகே சிறுவந்தாடில் கோழிப்பண்ணை அமைக்க, இடம் பார்ப்பதற்காக கடந்த 11ம் தேதி தனது டிஎன் 23ஏஜெ2472 சிவப்பு நிற இண்டிகா காரில் டிரைவருடன் புதுச்சேரிக்கு வந்தார். ராகவேந்திரா நகரில் வசிக்கும் நண்பரான டாக்டர் மகேந்திரன்,40 என்பவரை காரில் அழைத்துக் கொண்டு சிறுவந்தாடு சென்று, இரவு 8.55 மணிக்கு புதுச்சேரி திரும்பினார். அப்போது, நூறு அடி சாலையில் ரயில்வே கேட் அருகில், மூன்று பேர் கும்பல் டேனியல் காரை வழி மறித்தது. கார் டிரைவர் மற்றும் டேனியலின் நண்பரைத் தாக்கி, டேனியலுடன் காரைக் கடத்திச் சென்றனர்.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதையறிந்த கடத்தல் கும்பல், ஆரோவில் டோல்கேட் அருகில் டேனியலையும் காரையும் விட்டு விட்டு தப்பிச் சென்றது. ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கடலூர் சீதக்குப்பம் கார்த்திக் (எ) கார்த்திகேயன், 24, சிவபாலன், 23, ஆனந்தகுமார், 24, கடலூர் சின்ன காரைக்காடு அப்பு (எ) வெங்கடேசன், 24 ஆகியோர் கார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும், காரைக் கடத்தி, விற்பனை செய்யும் நோக்கில் இச் செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இந்நிலையில், கடலூரில் நடந்த குற்றச்சம்பவம் தொடர்பாக கார்த்திக் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது, புதுச்சேரியில் நடந்த கார் கடத்தல் சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசார் கார்த்திக் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர். கார் கடத்தல் கும்பலைக் கைது செய்த இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் உள்ளிட்ட போலீசாரை சீனியர் எஸ்.பி., சந்திரன், பாராட்டினார்.

