/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்க கோரிக்கை
ADDED : ஆக 18, 2011 04:33 AM
புதுச்சேரி : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வீராம்பட்டினம் டுவிங்கிள் ஸ்டார் இளைஞர் நற்பணி மன்ற பொதுக்குழு கூட்டம் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைவராக விஜய், துணைத் தலைவராக கலை, செயலாளராக ஜெயந்தன், துணை செயலாளராக ஆனந்தராஜ், பொருளாளராக விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு விரைவில் அடுக்குமாடி கட்டட வசதி செய்து தரவேண்டும். வீராம்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.