/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுமை : 12 நாட்கள் அமர்வு;17 நாட்கள் "லீவ்'
/
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுமை : 12 நாட்கள் அமர்வு;17 நாட்கள் "லீவ்'
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுமை : 12 நாட்கள் அமர்வு;17 நாட்கள் "லீவ்'
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் புதுமை : 12 நாட்கள் அமர்வு;17 நாட்கள் "லீவ்'
ADDED : ஆக 22, 2011 10:49 PM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், 12 நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த 18ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. பின், சபை ஒத்தி வைக்கப்பட்டது.அன்றைய தினமே, அலுவல் ஆய்வுக் குழு கூடியது. இதில், கூட்டத் தொடரை 12 நாட்களுக்கு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை குறைந்தபட்சம் 20 நாட்களாவது நடத்த வேண்டும் என அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 15ம் தேதி வரை சபை நடந்தாலும், 12 நாட்கள் மட்டுமே அமர்வு உண்டு. இடையிடையே 17 நாட்களுக்கு அமர்வு இல்லை.சட்டசபை நடக்கும் நாட்கள், அலுவல் விபரங்கள் வருமாறு: வரும் 24ம் தேதி காலை 9.30 மணிக்கு, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதித் துறையை கவனிக்கும் முதல்வர் ரங்கசாமி, சபையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதையடுத்து, 25, 26 ஆகிய தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், 27, 29 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீது பொது விவாதமும் நடக்கிறது.
இந்த மாதம் 30, 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் அமர்வு கிடையாது. மான்யக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் 2ம் தேதியன்று துவங்குகிறது. அன்றைய தினமும், மறுதினமும்( 2, 3ம் தேதிகள்) சட்டசபை, ஆட்சியாளர், அமைச்சரவை, நீதி நிர்வாகம், தேர்தல்கள், வருவாய் மற்றும் உணவு, விற்பனை வரி, அரசுச் செயலகம், கருவூலம் மற்றும் கணக்குகள் நிர்வாகம், போலீஸ், சிறைச்சாலைகள், ஓய்வு அனுகூலங்கள், பொதுப் பணி, சுகாதாரம், செய்தி மற்றும் விளம்பரம், கூட்டுறவு, மின்சாரம், அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கடன்கள், கட்டட செயல்முறை திட்டங்கள் ஆகிய 19 துறைகள் மீது விவாதம் நடக்கிறது. செப்டம்பர் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை அமர்வு இல்லை. 12ம் தேதியன்று, போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகள் மீதும், 13ம் தேதி, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, புள்ளி விபரங்கள், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, தொழில்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் வழிகாட்டல் ஆகிய துறைகள் மீதும் விவாதம் நடக்கிறது.
தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, சமூக நலம் ஆகிய துறைகள் மீது 14ம் தேதியும், மாவட்ட நிர்வாகம், மீன்வளம், சமுதாய வளர்ச்சி ஆகிய துறைகள் மீது 15ம் தேதியும் விவாதம் நடக்கிறது. அன்றைய தினம், நிதி தொடர்பான சட்ட மசோதாக்களும் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. பின், பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெற்று, காலவரையின்றி சபை ஒத்தி வைக்கப்படுகிறது.