sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பி.என்.எல்., சொத்துக்களை ஜப்தி செய்ய முதலீட்டாளர்கள் கோரிக்கை

/

பி.என்.எல்., சொத்துக்களை ஜப்தி செய்ய முதலீட்டாளர்கள் கோரிக்கை

பி.என்.எல்., சொத்துக்களை ஜப்தி செய்ய முதலீட்டாளர்கள் கோரிக்கை

பி.என்.எல்., சொத்துக்களை ஜப்தி செய்ய முதலீட்டாளர்கள் கோரிக்கை


ADDED : ஆக 22, 2011 10:50 PM

Google News

ADDED : ஆக 22, 2011 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பி.என்.எல்., நிறுவனத்திற்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என, முதலீட்டாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

பி.என்.எல்., முதலீட்டாளர்கள் மாதாந்திர கூட்டம், பாரதி பூங்கா அருகில் நடந்தது. தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பி.என்.எல்., சொத்துக்களை விற்பனை செய்ய, உதவி கலெக்டரை புதுச்சேரி அரசு நியமனம் செய்துள்ளது. அவர், 3.11.2009ல் அந்நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 250 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டார். அதில், நேரு வீதியில் உள்ள கட்டடம், அரியூரில் விவசாய நிலம் 41 ஏக்கரை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஜப்தி செய்துள்ளார். மேலும் 14 இடங்களில் உள்ள அசையா சொத்துக்களை இதுவரை ஜப்தி செய்யவில்லை. தமிழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்ட அச்சொத்துக்களை உடனே ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை நீதிமன்ற உத்தரவு பெற்று, விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பி.என்.எல்., நிறுவனத்தில் வீடுகளை அடமானம் வைத்து கடன் பெற்ற பலர், வீட்டு பத்திரங்களை ஒப்படைத்தால் கடன் தொகை முழுவதையும் கொடுத்துவிடுவதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பி, கடனை வசூல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










      Dinamalar
      Follow us